×

வலிமை பட தயாரிப்பாளருக்கு ரூ.2 கோடி நஷ்டம் - சினிமாவுல இதலாம் சகஜம்!

 
ajith

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர்.  பாலிவுட் பட தயாரிப்பாளர். ஸ்ரீதேவியிடம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதற்காக போனிகபூர் தயாரிப்பில் அஜித் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் படங்களை போனிகபூர் தயாரித்து வருகிறார். அமித் ரவிந்தர்நாத் ஷர்மா என்பவர் இயக்கும் ‘மைதான்’ புதிய படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இப்படம் இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக கொண்டது. 

இப்படத்தில் அஜய் தேவ்கான் உள்ளிட பலரும் நடித்து வருகின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்படவுள்ளது. இப்படத்திற்காக மும்பையில் பிரம்மாண்ட கால்பந்து மைதான செட் அமைக்கப்பட்டிருந்தது.  

சமீபத்தில் அடித்த டவ்தே புயலால் அந்த செட் முழுவதும் சேதமடைந்துவிட்டது. உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும் ரூ.2 கோடி வரை தயாரிப்பாளர் போனிகபூருக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News