×

வலிமை ரிலீஸ் தேதி இதுதானாம் - கொண்டாடும் தல ரசிகர்கள் 

 
வலிமை ரிலீஸ் தேதி இதுதானாம் - கொண்டாடும் தல ரசிகர்கள்

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் இரண்டாவது படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதை தொடர்ந்து, சில புகைப்படங்கள் லீக்காகி ரசிகர்களை குஷியாக்கியது. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தயாரிப்பாளரான போனி கபூரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகும் என தெரிவித்தார்.  தொடர்ந்து தல அஜித்தும், எல்லா அப்டேட்டும் உரிய நேரத்தில் வரும். இது எனது தொழில் என ரசிகர்கள் மீது தனது அதிருப்தியை தெரிவித்தார்.

இந்நிலையில், வலிமை திரைப்படத்தை ஆகஸ்டு 13ம் தேதி வெளியிட போனிகபூர் முடிவெடுத்துள்ளாராம். இந்த செய்தி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News