Categories: Cinema News latest news

நீங்களா நானா பாத்துக்கலாம்.! உலகநாயகனுடன் மீண்டும் மல்லுக்கட்டபோகும் அஜித்குமார்.!?

இந்த வருட பொங்கலை மிகவும் வலிமையாக வலிமையுடன் கொண்டாடிவிடலாம் என அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்கள், தியேட்டர்காரர்கள் என காத்துகொண்டு இருந்தனர். ஆனால், அவர்களுக்கு எல்லாம் அல்வா கொடுத்துவிட்டது கொரோனா வைரஸ்.

அந்த வலிமை எப்போது ரிலீஸ் ஆகும் என அஜித் ரசிகர்களை விட பொங்கல் நேரத்தில் ‘அந்த’ புதிய திரைக்காவியங்களை வெளியிட்ட தியேட்டர்காரர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.

தற்போது அதற்கான விடைகிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, வலிமை திரைப்படம் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் வெளியிட அதிக வாய்ப்புள்ளதாம். இடையில் அஜித்குமார் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் சந்தித்து பேசியுள்ளனர் அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், அதே மார்ச் இறுதியில் தான் விக்ரம் திரைப்படத்தின் ரிலீஸ் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே வேதாளம், தூங்கா வனம் என அஜித் – கமல் திரைப்படங்களுக்கு போட்டி இருந்தது. தற்போது மீண்டும் அதேபோல, விக்ரம் – வலிமை இருக்கும் என கூறப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan