அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் வலிமை. விஸ்வாசம் படத்திற்கு பின் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். கடந்த 2 வருடங்களாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த மேக்கிங் வீடியோவில் பைக் ரேஸ் காட்சிகள் மற்றும் அஜித் வீலிங் செய்த போது கீழே விழுந்த காட்சிகள், அதன்பின் மீண்டும் வீலிங் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதைப்பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் தங்களுக்கு இந்த காட்சியை பார்த்தவுடன் கண்ணீர் வந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இப்படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை அன்று இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. சரியாக அன்றுதான் அஜித்திற்கு செண்டிமென்ட் தேதியான வியாழக்கிழமையும் வருகிறது. ஆனால், ஜனவரி 12ம் தேதி வெளியிட போனிகபூர் திட்டமிட்டார். ஆனால், இதற்கு ஓவர்சீஸ் வினியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏனெனில் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வியாழக்கிழமைதான் விடுமுறை வருகிறது.
எனவே, ஜனவரி 13ம் தேதியே வெளியிடலாம் என்கிற முடிவுக்கு போனிகபூர் வந்துவிட்டாராம்.
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…
Karur: நடிகரும்…