Connect with us

Cinema News

தள்ளிப்போன வலிமை ரிலீஸ்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திடீரென கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக அரசு திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது.

மேலும், இன்று முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவு காட்சி ஒளிபரப்பாகாது. அதிகம் பேர் தியேட்டருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மொத்த வசூலும் போச்சு. எனவே, வலிமை படம் வெளியாகுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.

valimai

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரின் டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் பிரதிபலனை எதிர்பாராத அன்புதான் எங்களை வழிநடத்தியது. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் தியேட்டரில் ரசிக்க வேண்டும் என்றுதான் எடுத்தோம்.

அதேநேரம் ரசிகர்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். உலகம் முழுவதும் தற்போது கொரோனா பரவி வருகிறது. எனவே, எனவே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். எனவே, நிலைமை இயல்பாக மாறும் வரை வலிமை படத்தின் ரிலீஸ் தள்ளி வைப்பது என நாங்கள் முடிவெடுத்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

valimai

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top