அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வருகிற 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 2 வருடங்களுக்கு முன்பு துவங்கி இப்படம் பல தடைகளை தாண்டி இப்போதுதான் வெளி வருகிறது. இப்படத்தை போனிகபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் மயிர் கூச்செரியும் அதிரடி சண்டை மற்றும் பைக் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் மற்றும் புரமோ வீடியோக்கள் வெளியாகி தாறுமாறாக ஹிட் அடித்து இப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் இப்படம் சுமார் 1000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. சென்னையின் பல தியேட்டர்களில் ஜரூராக முன்பதிவு நடந்து வருகிறது. பல திரையரங்குகளில் முதல் 3 நாள் காட்சிகள் ஏற்கனவே முன் பதிவு முடிந்து ஹவுஸ் புல்லாகி விட்டது.
பகலும், இரவும் என ரசிகர்கள் வரிசையில் காத்திருந்து வலிமை படத்தின் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற்று வருகின்றனர். அதோடு, அந்த டிக்கெட்டுகளை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
BookMyshow இணையதளத்தின் மூலம் வலிமை படத்திற்கு 2 மில்லியன் (20 லட்சம்) டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை போனிகபூரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம், வலிமை திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கையை வைத்து கணக்கிட்டால் இப்படம் முதல் நாளிலேயே ரூ.30 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என பலரும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நடித்த…
Karur Vijay:…
கரூரில் நடந்த…
Karur: நடிகர்…
Ajith: தமிழ்…