×

வலிமை அப்டேட் வெளியிட்ட அஜித்... போனி கபூருடன் வம்பு சென்ற தல படை

வலிமை பட அப்டேட்டை இறுதியில் தல அஜித்தே வெளியிட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 
 

அஜித்தின் 60வது படமாக உருவாகிறது வலிமை. இதை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் தல நடித்து வருகிறார். கொரோனாவால் நிறுத்தப்பட்டு இருந்த படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. 

வலிமை படத்தின் பெயரை தவிர படக்குழு இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ரசிகர்களும் யார் யாரிடமோ சிபாரிசு கூட சென்று விட்டார்கள். ஆனால் அறிவிப்பு தான் வந்த பாடு இல்லை. வில்லன் நடிகர் முதல் தயாரிப்பாளர் வரை சென்று பதில் கிடைக்காததால் இவரை தான் கடைசி நம்பிக்கை என அவரிடமே பதிலுக்கு சென்று விட்டனர் அஜித் ரசிகர்கள். அட நம்ம தல கிட்ட தான் வலிமை அப்டேட் எப்போது என கடைசியாக கேட்டு விட்டனர். தல அஜித்தும் பிப்ரவரி மாத இறுதியில் அப்டேட் வெளியிடப்படும் எனத் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து, ரசிகர் ஒருவர் வெளியிட்டு இருக்கும் ட்வீட் வைரலாகி வருகிறது. அதில், வலிமை செட்டில் தல அஜித்திடம் 10 நிமிடம் பேச நேரம் கிடைத்தது. அப்போது அவரிடம் அப்டேட் குறித்து கேட்டோம். இந்த மாத இறுதியில் எல்லா தகவல்களும் கிடைக்கும் எனக் கூறியதாக ட்வீட் தட்டி இருக்கிறார். இதனால், தயாரிப்பாளரான போனி கபூரிடம் அப்டேட் மறந்துறாதீங்க என வம்பு செய்து வருகிறார்கள். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News