×

தல பேன்ஸ் எந்திரிங்க #Valimai அப்டேட் வந்தாச்சு... செமப்பா!
 

அஜித்தின் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த முக்கிய தகவலை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டு இருக்கிறார்.
 
தல பேன்ஸ் எந்திரிங்க #Valimai அப்டேட் வந்தாச்சு... செமப்பா!

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் இரண்டாவது படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதை தொடர்ந்து, சில புகைப்படங்கள் லீக்காகி ரசிகர்களை குஷியாக்கியது. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 


தொடர்ந்து, கொரோனா அச்சத்தால் படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. இதனால் வலிமை குறித்து அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ரசிகர்களும் எக்கசக்கமாக எல்லாரிடமும் அப்டேட், அப்டேட் என ஓய்ந்து போகினர். இந்நிலையில், தயாரிப்பாளர் பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என ட்வீட் தட்டி இருக்கிறார். அதில், வரும் மே 1ந் தேதி அஜித்தின் 50வது பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அஜித் ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள். கமெண்ட்கள் றெக்கை கட்டி பறந்து வருகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News