நேற்று முன்தினம் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருந்தாலும் வசூலில் தற்போது வரை எந்த குறையும் வைக்கவில்லை என்றே கூற வேண்டும். எப்போதும் பெரிய நடிகர் படம் என்றால் கண்டிப்பாக முதல் வாரம் எப்படியும் கூட்டம் சேர்ந்துவிடும். அதில் தியேட்டர்காரர்கள் ஓரளவு போட்ட காசை எடுத்து விடுவார்கள்.
அதற்கு பிறகு படம் நன்றாக இருந்தால் கூட்டம் வரும். தியேட்டர்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். அந்த வகையில் வலிமை திரைப்படத்தின் வெற்றி வரும் வாரங்களில் வெளிச்சமாக தெரிந்துவிடும். வலிமை திரைப்படம் ஹிந்தியிலும் டப் ஆகி வெளியானது. ஹிந்தியில் இப்படத்தின் முதல் நாள் வசூல் 50 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்களேன் – இரண்டு காலுக்கு நடுவில்.. மனுஷன் வாழ்ந்திருக்கான்யா.! மன்மத லீலையில் சிக்கிய பகீர் புகைப்படம்.!
இதனை பார்த்தவுடன் மற்ற ரசிகர்கள் விஜய் படத்தின் ஹிந்தி டப்பிங் முதல்நாள் வசூலை எடுத்து ஒப்பிட்டு பார்க்க தொடங்கிவிட்டனர். மாஸ்டர் ஹிந்தி டப்பிங் முதல் நாள் வசூல் 4 லட்சம் மட்டுமே என கூறப்படுகிறது. இதனை குறிப்பிட்டுஒரு பாலிவுட் திரை விமர்சகர் ஒருவர் இந்த ஐந்து லட்சத்தை கொண்டு தியேட்டர் கரண்ட் பில் கூட கட்ட முடியாது. அங்குள்ள ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாது என்று காரசாரமாக தனது விமர்சனத்தை முன் வைத்தார்.
ஆனால், மாஸ்டர் திரைப்படம் தமிழகம், தெலுங்கு, மலையாள மொழிகளில் மிகப்பெரிய வெற்றியடைந்தது நாம் அனைவருக்கும் தெரியும். மேலும் இந்த படத்திற்கு பாலிவுட் ரீமேக் செய்யும் உரிமைக்கு கடும் போட்டி நிலவியதும் நமக்கு தெரியும்.
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…
TVK Vijay:…
Vijay TVK:…