விஸ்வாசம் படத்திற்கு பின் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியானது. மேலும், இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதில், பைக் ரேஸ் காட்சிகள் மற்றும் அஜித் வீலிங் செய்த போது கீழே விழுந்த காட்சிகள், அதன்பின் மீண்டும் வீலிங் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘விசில் தீம்’இசை வீடியோவை போனிகபூர் தற்போது வெளியிட்டுள்ளார். அஜித் – யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் ஏற்கனவே பல தீம் இசைகள் ஹிட் அடித்துள்ளது. பில்லா, மங்காத்தா ஆகிய படங்களில் அஜித்துக்கு யுவன் அமைத்த தீம் மியூசிக் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
தற்போது இந்த தீம் மியூசிக்கும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…
Karur: நடிகரும்…