பொங்கலுக்கு தியேட்டர்களை மொத்தமா தூக்கிய வணங்கான்!.. ரிலீஸ் பண்றது அவங்களாச்சே!...
Vanangaan: தீபாவளி, பொங்கல் என்றாலே பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகும். அதுவும், குறைந்தபட்சம் 2 பெரிய நடிகர்களின் படங்கள் மற்றும் சின்ன நடிகர்களின் படங்களும் சேர்ந்து வெளியாகும். ஏனெனில், இது போன்ற முக்கிய பண்டிகைகளின் போது தங்களின் படங்கள் வெளியாக வேண்டும் என எல்லா நடிகர்களும் ஆசைப்படுவார்கள்.
விடாமுயற்சி: அதேநேரம் எல்லாம் சரியாக அமைய வேண்டும். அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் திட்டமிட்டு பின்னர் தள்ளி போய்விட்டது. இதற்கு காரணம் இப்படத்தை தயாரித்துள்ள லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தர்பார், பொன்னியின் செல்வன் 2, லால் சலாம், வேட்டையன், இந்தியன் 2 போன்ற படங்களால் அந்த நிறுவனம் கடனாளி ஆனது.
கேம் சேஞ்சர்: பொங்கலுக்கு விடாமுயற்சி வரவில்லை என்றாலும் பல சின்ன படங்களும் ரேசில் இறங்கின. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது. இதில் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது ஷங்கர் இயக்கத்தில் 500 கோடி செலவில் உருவாகியிருக்கும் கேம் சேஞ்சர் படமும், பாலா இயக்கியுள்ள வணங்கான் படமும்தான்.
வணங்கான்: பாலா மனதை உலுக்கும் படி கதை சொல்வார். குறிப்பாக இவர் படங்களின் கிளைமேக்ஸ் அதிர வைக்கும். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் படங்களை பார்த்தால் அது புரியும். எனவே, பாலா படங்களுக்கென்றே ரசிகர்கள் இருக்கிறார்கள். வணங்கான் படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டு பின் அருண் விஜய் உள்ளே வந்தார்.
இயக்குனர் பாலா: ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் அருண் விஜய்க்கு வணங்கான் அமைந்திருக்கிறது. எனவே, இந்த படத்தில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என பலரும் சொல்கிறார்கள். ஆனால், வணங்கான் படம் பொங்கலுக்கு வெளியாகாது என சிலர் கிளப்பிவிட்டனர். ஆனால், அதில் உண்மையில்லை. பொங்கலுக்கு கண்டிப்பாக வணங்கான் வருகிறது.
அதிலும் சுமார் 500 தியேட்டர்களில் இப்படத்தை திரையிடவிருக்கிறார்கள். உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம்தான் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடவுள்ளது. எனவே, அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், ஷங்கரின் கேம் சேஞ்சர் படமும் தமிழகத்தில் 500 தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.