அஜித்தோட பலம் தெரிஞ்சே போட்டி போட கூடாது.. வணங்கானில் சுரேஷ் காமாட்சி ஃபாலோ பண்ண டெக்னிக்

by Rohini |
sureshkamatchi
X
sureshkamatchi

விடாமுயற்சி:

அஜித்தின் விடாமுயற்சி பொங்கல் ரேஸிலிருந்து பின் வாங்கியதும் வரிசையாக அடுத்தடுத்து 10 படங்கள் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளன. அதுவரை இந்தப் படங்களின் நிலைமை என்னவென்றே தெரியாமல் இருந்தது. ஆனால் அடுத்தடுத்து அதுவும் 12 வருடத்திற்கு முன்பே ரிலீஸாக வேண்டிய மதகஜராஜா படமும் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளன.ஆனால் விடாமுயற்சி படம் எப்படியாவது பொங்கலுக்கு வந்துவிடும் என்றுதான் நினைத்தார்கள்.

விடாமுயற்சிக்கு முன் குட் பேட் அக்லி படம்தான் பொங்கல் ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். விடாமுயற்சி படத்திற்காகத்தான் குட் பேட் அக்லி திரைப்படமும் தள்ளிப் போனது. அந்தப் படம் அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே தன் ரிலீஸ் தேதியில் இருந்து மாறாமல் கெத்து காட்டும் படமாக வணங்கான் திரைப்படம் இருக்கின்றது.

வணங்கான் திரைப்படமும் பொங்கல் வெளியீடு என்று அறிவித்ததும் அனைவரின் பயமும் அஜித் படத்தோட மோதுகிறாரே பாலா என்ற வகையில் பேசி வந்தார்கள். ஏற்கனவே அஜித்துக்கும் பாலாவுக்கும் இடையே தீர்க்க முடியாத பகை இருக்கிறது. இதில் படத்தோட மோதப் போகிறார்களா என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் வணங்கான் படத்தின் ரிலீஸ் தேதியை இவ்வளவு தைரியமாக எப்படி லாக் செய்தோம் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கமாக கூறியிருக்கிறார். இதோ அவர் கூறியது:

விடாமுயற்சி படம் ஒரு வேளை ரிலீஸ் ஆகி இருந்தால் நமக்கு ஸ்கிரீன் குறைவாக கிடைக்கும். அது ரியாலிட்டி. அஜித்தோட ஃபேன் ஃபாலோயர்ஸ், அந்த படத்தின் பட்ஜெட், அஜித்தின் பலம் இதையெல்லாம் பார்க்க வேண்டும். எப்போதுமே ஒருத்தருடன் மோத மோத அவருடைய பலம் என்ன என்பது தெரிந்து விடும். இனி அஜித் சாரிடம் எதிர்த்து நிற்கிறதெல்லாம் கஷ்டம். அவருடன் போட்டி போடுவது என்பது ஆரோக்கியமாக இருக்காது.

என்னை பொறுத்த வரைக்கும் நான் நினைத்தது விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆவதில் தாமதமாகும் என நான் தெரிந்து கொண்டேன். நான் விசாரித்த வரைக்கும் அந்த படம் பொங்கலுக்கு ரிலீசாவது தாமதமாகும் என்றுதான் தெரியவந்தது. புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவுதான் படம் தள்ளிப்போகிறது என அறிவித்தார்கள். அதன் பிறகு வணங்கான் படத்தை கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்திருந்தால் இந்த தேதி எனக்கு கிடைத்திருக்காது.

இந்த பிரச்சினைதான் பல படங்களுக்கு இப்போது நடந்திருக்கிறது. ஏனெனில் அவர்கள் எல்லாருமே விடாமுயற்சி படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வந்துவிடும் என நினைத்திருந்தார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு வேளை வந்தால் வணங்கான் படத்தை தள்ளிப் போடலாம் என்றுதான் நினைத்து வைத்திருந்தேன். தள்ளிபோவதில் என்ன சிக்கல் இருக்கிறது என சுரேஷ் காமாட்சி அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.

Next Story