சண்டையில் விஜயகாந்தை நினைவுபடுத்தும் சண்முக பாண்டியன்!.. வில்லனாக மிரட்டும் மோகன் ராஜா!
கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள வானவேடிக்கை திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர்கள் ஆர்யா மற்றும் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளனர்.
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். சகாப்தம் படம் மூலம அறிமுகம் ஆன அவர் தொடர்ந்து மதுரை வீரன், படைத் தலைவன்மற்றும் கொம்பு சீவி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சதீஷ் எம்.பி. தயாரித்துள்ள வான வேடிக்கை படத்தில் சண்முக பாண்டியன் நடித்துள்ளார். இப்படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக ஷிவானி ராஜசேகர் நடித்துள்ளார். இயக்குநர் மோகன் ராஜா முதல்முறையாக முழுநீள வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பருத்திவீரன் சரவணன், ஜெயப்பிரகாஷ், இந்துமதி, இயக்குநர் தமிழ், சித்ரா லக்ஷ்மணன், கிரண், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். தீராத விளையாட்டு பிள்ளை உல்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ள திரு இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் சண்உக பாண்டியனின் வான வேடிக்கை படத்தின் டிரைலர் இன்ற்ரு மாலை வெளியானது. இதுவரை சண்முக பாண்டியன் நடித்த திரைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இப்படத்தில் அவர் நடித்திருப்பது டிரெய்லரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. பெரிய ஹீரோவுக்கான அலட்டல் இல்லாமல், நம் பக்கத்து வீட்டுப் பையனைப் போன்ற எதார்த்தமான தோற்றத்தில்அவர் காட்சியளிக்கிறார். அதேநேரத்தில் சண்டைக் காட்சிகளில் அவரது வேகமும் உடல்மொழியும் தந்தை விஜயகாந்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் பலரும் கூறுக்கின்றனர்.

ஜெயம் , சந்தோஷ் சுப்பிரமணியம் , தனி ஒருவன் , வேலைக்காரன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா, இந்தப் படத்தின் மூலம் முழுநீள வில்லனாகக் களமிறங்கியுள்ளார். குறிப்பாக தனி ஒருவன் திரைப்படத்தில் அரவிந்த்சாமி நடித்த சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தைப் போன்று, இப்படத்தில் வலுவான வில்லன் கதாபாத்திரமாக இவரது வேடம் அமையும் என்ற்ரு தெரிகிறது.
இன்று வெளியான டிரெய்லர் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பை முழுத் திரைப்படமும் பூர்த்தி செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
