Categories: Cinema News latest news

இதெல்லம் என் பொண்டாட்டி பாக்காம இருந்தா சரி.. மேடையில் அசடு வழிய உளறி கொட்டிய ‘வந்தியத்தேவன்’ கார்த்தி…

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட வரலாற்று படமான ‘பொன்னியின் செல்வன் 1’ செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது. கடந்த மாதம் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. டீஸர் வெளியீட்டிற்குப் பிறகு ரசிகர்களிடம் மிகுந்து எதிர்பார்ப்புகளைப் பெற்ற நிலையில், படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியானது.

மேலும், படத்தின் முதல் சிங்கிள் வீடியோவான ‘பொன்னி நதி’ நேற்று மாலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கார்த்தி, ஜெயம் ரவி, மலையாள நடிகர் ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது மேடையில் தொகுப்பாளர் கார்த்தியிடம், வந்திய தேவனுக்கும் கார்த்திக்கும் உள்ள ஸ்பெஷல் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார். அப்போது பேசிய கார்த்தி, வந்தியத்தேவன் கதாபாத்திரம்  ஸ்பெஷல் என்னவென்றால் ஒரு மீன்கார பொண்ணு கிட்டயும் பேசுவான் இளவரசி கிட்டயும் பேசுவான், குந்தவை கிட்ட ஒரு மாதிரி பேசுவான் மொத்தத்துல எல்லா பொண்ணுங்களுக்கும் லைன் ‘அ’ போடுவான் என்று கூறினார்.

இதையும் படிங்களேன் – தளபதி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அதி பயங்கர தகவல் இதோ.. தலைவரே வேணாம் தலைவரே…

ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு மாதிரி பேசும் கதாபாத்திரம் எனக்கு கொடுக்கப்பட்டது, அது எனக்கு நன்றாக வந்தது என்றும் கூறியதோடு “இதை என் பொண்டாட்டி பாக்காம இருந்தா சரி” என்று ஓப்பனாக பேசிவிட்டு அப்படியே அதை மழுப்புவது போல், நகைச்சுவையாக பேசியிருப்பார். அதற்கு ரசிகர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தி வரவேற்றனர்.

Manikandan
Published by
Manikandan