விக்ரமுடன் ஜோடி சேரும் சன் டிவி சீரியல் நடிகை!

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் வாணி போஜன். இவர் அசோக் செல்வன் நடித்த ஓ மை கடவுளே படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதைத் தொடர்ந்து கார்த்தி சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிப்பில் ஜெய் உள்ளிட்டோர் நடித்த டிரிபிள்ஸ் வெப் சீரிஸில் ஹீரோயினாக வாணி போஜன் நடித்திருந்தார். இவை இரண்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனால், வாணி போஜனின் கவனம் சின்னத்திரையை விட்டுவிட்டு வெள்ளித்திரை பக்கம் திரும்பியிருக்கிறது. இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். லாக் அப் படத்தில் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தநிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ஹீரோயினாக வாணி போஜன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் முதல்முறையாக அவர், தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார். இதனால் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. வாணி போஜன் இதில் ஹீரோயினாக நடிக்கும்பட்சத்தில் முக்கிய ஹீரோவுடன் அவர் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது இருக்கும். இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.