×

"தாழ் திறவா"  வாணி போஜனின் மிரட்டலான போஸ்டர்!

சின்னத்திரையில் மாயா, ஆஹா, தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்தவர் வாணி போஜன். அவரது முதல் படமான  ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது.

 

தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் பலனாக தற்ப்போது தொல்பொருள் ஆய்வை மையமாக வைத்து உருவாகும் "தாழ் திறவா" என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார்.

ஆதவ் கண்ணதாசனுக்கு ஜோடியாக வாணிபோஜன் நடிக்கும் இப்படத்தை பரணி சேகரன் இயக்கியுள்ளார். மேலும், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, லிசா உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.  ஊட்டி, கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இப்படத்தின் 80%படப்பிடிப்பு  நிறைவடைந்து விட்டநிலையில் தற்ப்போது டைட்டிலுடன் கூடிய படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி திகில் கிளப்பியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News