Categories: Bigg Boss latest news television

எல்லாரும் சாவுங்க.! எனக்கு ‘அது’ வேணும்.! அடம்பிடிக்கும் வத்திக்குச்சி வனிதா.!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று ஹாட்ஸ்டார் OTT தளத்தில் காரசாரமாக ஆரம்பித்து சூடான ஆரம்பத்தை கொடுத்துள்ளது. இந்நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஹாட்ஸ்டார் OTT தளத்தில் மட்டுமே 24 மணிநேரமும் 7 நாட்களும் என இடைவிடாது இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

அதற்கேற்றாற் போல பிக் பாஸ் குழு போட்டியாளர்களை கடுமையாக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த சீசன்களில் பல பிரச்சனைகளை உருவாக்கிய போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து களமிறங்கியுள்ளது. வனிதா, அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜூலி, பாலா, தாடி பாலாஜி, அபினவ், தாமரை செல்வி, ஷரீக், சினேகன், நிரூப் என போர்க்களத்திற்கு தேர்வு செய்வது போல தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதையும் படியுங்களேன் – இதுக்குத்தான் உனக்கெல்லாம் எழுத மாட்டேன்.! ஏ.ஆர்.முருகதாஸை விளாசிய முக்கிய பிரபலம்.!

இதில் வந்த முதல் நாள் முதல் வனிதாவின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது என்பது பார்ப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதற்கேற்றாற் போல தான் வரும் ப்ரோமோ விடீயோக்களில் அவர்தான் பிரதான படுத்தப்பட்டு வருகிறார்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவிலும் அவர் தான் பிரதானப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு காபி தான் வேண்டுமாம். காபி பவுடரை பிக் பாஸ் நிர்வாகம் சமயலறையில் கொடுக்கவில்லை போல, டீ தூள் தான் கொடுத்திருக்கிறார்கள் போல.

அதற்கு வனிதா, எனக்கு காபி தான் வேணும் கொடுங்க. என பிக் பாஸிடம் கறார் காட்டுகிறார். அவரை சமாதானப்படுத்த மற்ற போட்டியாளர்கள் முயற்சி செய்கின்றனர். ஆனால், அதற்கெல்லாம் வனிதா அடங்கவில்லை.

அதன் பிறகு கடுப்பான வத்திக்குச்சி வனிதா, டீத்தூள் பாக்கெட்டுகளை எடுத்து தனது கட்டிலுக்கு அடியில் பதுக்கிவிட்டார். எனக்கு காபி வேணும். இல்லைன்னா யாரும் டீ குடிக்க குடிக்காம சாவுங்க. என பதுக்கிவிட்டார்.

Manikandan
Published by
Manikandan