Connect with us

Bigg Boss

பிக்பாஸ் 7 சீசனை நிறுத்திடுங்க!. கடுப்பான வனிதா விஜயக்குமார்.. யக்கோவ் நீயா பேசுற!..

Vanitha vijayakumar: தமிழ் பிக்பாஸ் சீசன் 7ஐ பேன் பண்ணுங்க. இதெல்லாம் ப்ளாப் சீசன் என புலம்பிய வனிதா அடுத்த சில நிமிடங்கள் ஜர்க் ஆகி பேக் வாங்கிய சம்பவமும் நடந்து இருக்கிறது. அதுகுறித்த ஸ்க்ரீன்ஷாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக களமிறங்கினார் வனிதா. அதுவரை அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச இமேஜ் கூட சீசனில் கலந்துகொண்ட பின்னர் மொத்தமாக போனது. எதுக்கும் சண்டை எல்லாவற்றிலும் குறை சொல்லி பிரச்னையை ஊதி பெருசாக்கினார்.

இதையும் படிங்க: வந்த அன்னைக்கே டைவர்ஸா..? முத்து, மீனா வாழ்க்கையில் கட்டையை போடும் ஸ்ருதி.. ஆரம்பிச்சாச்சு போலயே..!

அதனால் ரசிகர்களுக்கு அவர் பெரிதாக பிடிக்காமல் போனது. இதனால் பாதியிலேயே எலிமினேட் ஆனார். ஆனால் பிக்பாஸ் தமிழில் எலிமினேட் ஆன போட்டியாளர் மீண்டும் வைல்ட் கார்டாக வந்த முதல் ஆள் வனிதா தான். ஆனால் இரண்டாவது முறைவும் அவருக்கு கிடைத்தது என்னவோ பல்ப் தான்.

இதை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ள அங்கையும் அவரின் சித்துவேலையை விடாமல் கூத்தடித்தார். ஆனால் கமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற எங்கே முன்னாடி பிரச்னை செய்த ரம்யா கிருஷ்ணன் ஹோஸ்ட்டாக வந்துவிடுவார்களோ என இவரும் நிகழ்ச்சியில் இருந்து உடனே சண்டை போட்டு வெளியேறினார்.

இதையும் படிங்க: ஒருவழியா ஆரம்பிக்க போகும் பொருட்காட்சி.. பாக்கியாவால் கடுப்பாகும் கோபி.. கண்ணீர் விடும் செழியன்..!

அதனை தொடர்ந்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் இந்த சீசன் ப்ளாப். உடனே முடித்துவிடுங்கள். மொக்க போட்டியாளர்கள். பிக்பாஸை பேன் செய்யுங்கள் என போஸ்ட் போட்டார். ஆனால் அடுத்த சில நிமிடத்திலையே, என்னுடைய பிக்பாஸ் ட்வீட்டை டெலிட் செய்து விட்டேன். இது அதுக்கான இடம் இல்லை. வாழ்க்கையில் நிறைய வேலை இருக்கிறது என மாத்தி பேசினார்.

ரசிகர்கள் அவர் கமெண்ட் பகுதியில் என்னக்கா பொண்ணு எலிமினேட் ஆன கடுப்பா? இல்ல நிதானத்துல தானே இருக்கீங்க என தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர். 

Continue Reading

More in Bigg Boss

To Top