×

விஜய் வீட்டிற்கு வந்த புகைப்படத்தை வெளியிட்ட வனிதா!

நடிகை வனிதா விஜயகுமார் விஜய்யின் சந்திரலேகா படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து ஒரு சில படங்களில் நடித்த அவர்.   பின்னர் திருமணம்,  குழந்தை என வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார். இதற்கிடையில் விவாகரத்து,  மறுமணம் , காதல் என பல பிரச்னைகளில் சிக்கினார்.

 

பின்னர் தற்ப்போது பிக்பாஸ், குக்கு வித் கோமாளி என டிவி நிகழ்ச்சிகள் மூலம் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி இளைஞர்கள் மத்தியில் செம பேமஸ் ஆனார். ரசிகர்கள் அவரை "வனிதா அக்கா" என சொந்தம் கொண்டாடும் அளவிற்கு அவர்களது மனதில் இடம்பிடித்துவிட்டார்.

இந்நிலையில் தற்ப்போது நடிகர் விஜய் தன் மகன் ஸ்ரீகரியின் பிறந்தநாளுக்காக அவரது மனைவியுடன் வனிதா விஜயகுமார் வீட்டுக்கு வருகை தந்தபோது எடுத்த பழைய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். வனிதாவின் மகனுக்கு ஸ்பைடர் மேன், கார் உள்ளிட்ட பொம்மைகளை  பரிசாக கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தியுள்ள இந்த போட்டோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News