உனக்கு என்ன தகுதி இருக்கு? நடிகை ரோஜாவை அசிங்கப்படுத்திய வனிதா!

 
roja vanitha

நடிகை ரோஜா: 

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்த நடிகை ரோஜா டஸ்கி ஸ்கின் அழகில் பார்ப்பதற்கு கொழுக் மொழுக் தோற்றத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் மென்மையான தன்னுடைய நடிப்பால் கவர்ந்திழுத்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான தென்னிந்திய மொழி நடிகராக பார்க்கப்படுகிறார். இவர் திரைப்பட இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

roja

குடும்ப வாழ்க்கை, அரசியல்: 

திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் குடும்பம் வாழ்க்கையில் செட்டில் ஆன ரோஜா அதன் பிறகு அரசியலில் நுழைந்து சில வருடம் பயணித்தார். அதன் பிறகு தற்போது மீண்டும் தமிழ் திரைத்துறைக்கு வந்திருக்கும் நடிகை ரோஜா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார்.

இப்படியான சமயத்தில் குக் வித் கோமாளி சீசன் 7  நிகழ்ச்சியின் நடுவராக நடிகை ரோஜாவை கொண்டு வந்திருக்கிறார்கள். அதை வனிதா கடுமையாக விமர்சித்து ரோஜாவை அசிங்கப்படுத்தி இருக்கிறார். இது குறித்து வனிதா கூறி இருப்பதாவது.... ரோஜா என்னுடைய பிரண்டு தான்.

cook with comali 7

உனக்கு என்ன தகுதி இருக்கு: 

ஆனாலும், இந்த ஷோல அவங்க ஜட்ஜா இருக்குறதுக்கு என்ன தகுதி இருக்கு? செஃப்  தாமுக்கு அப்புறம் அந்த சீட்ல அமர தகுதியானவர் நான்தான். அதனால இந்த ஷோவுக்கும் ரோஜாவுக்கும் சம்பந்தமே இல்ல. அவங்க இதுக்கு தகுதியானவங்களும் இல்லை என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இது ரோஜாவின் ரசிகர்களை கோபப்பட வைத்தாலும் ஒரு சிலர் வனிதா சொல்வது சரிதான். அவருக்கு சமையல் பற்றி என்ன தெரியும்? அதற்கு வனிதாவே மேல் என்று வனிதாவின் கருத்தை சிலரும் ஆதரித்து வருகிறார்கள்

 

From Around the web