Categories: Cinema News latest news television throwback stories

பிரபல தொகுப்பாளினியை எட்டி உதைத்த வனிதா – விஜய் டிவியில் பரபரப்பு (வீடியோ)

சர்ச்சைக்குரிய நடிகையான வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். அதற்கு முன்னர் அவர் சொத்து தகராறில் அப்பா விஜய்குமாருடன் ரோட்டில் அடித்து புரண்டு விமர்சிக்கப்பட்டு பிரபலம் ஆனார். அதனால் இதுவரை குடும்பமே ஒதுக்கிவிட்டது.

இருந்தும் தனது தைரியத்தால் தொடர்ந்து முன்னேற முயற்சிகள் செய்துவருகிறார். இதனிடையே சில பல பிரச்சானைகளில் சிக்கி குறிப்பாக திருமணம் விவகாரத்தில் சிக்கி சீரழிந்து வருகிறார். இதனால் வனிதாவை திரைத்துறையை சேர்ந்தவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை எல்லோரும் விமர்சித்து வந்தனர்.

அப்படியிருந்தும் அந்த திருமணம் விவகாரத்தில் முடிந்தது. அவரது மூன்றாவது கணவர் பீட்டர் பால் சமீபத்தில் இறந்துவிட்டார். அதையெல்லாம் பெரிதா எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து தனது கெரியர், பிசினஸில் கவனம் செலுத்தி வரும் வனிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது வத்திக்குச்சி வனிதா பாட வராங்க என்று பிரியங்கா கிண்டல் அடிக்க வனிதா அவரை எட்டி உதைத்து attitude காட்டினார். இந்த வீடியோவை பார்த்து பிரியங்காவின் ரசிகர்கள் வனிதாவை விமர்சித்துள்ளனர்.

பிரஜன்
Published by
பிரஜன்