×

கழுத்து நிறைய பணமாலை அணிந்திருக்கும் வனிதா - பீட்டர் பால்... இது எதுக்கு?

வனிதா வீட்டில் நடந்த விஷேஷம் வைரலாகும் புகைப்படம்

 

நடிகை வனிதா  பீட்டர்பால் என்ற அனிமேஷன் இயக்குனரை  கடந்த ஜூன் 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. அவரது மனைவி எலிசபெத் ஹெலன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கூட செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டார்.

இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக பார்க்கப்பட்டதை அடித்து வனிதாவுக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டு வந்தனர். அது அத்தனைக்கும் பதிலடி கொடுத்து தனது புதுமண வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் வனிதாவுக்கு தினம் தினம் ஒரு பிரச்சனை வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் கணவர் பீட்டர் பாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் தற்ப்போது நடந்த நல்ல காரியங்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக நடிகை வனிதா தனது மகள் மற்றும் கணவருடன் வீட்டில் லட்சுமி குபேர பூஜை செய்து கடவுளை வழிபட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு " 2020 ஆம் ஆண்டில் இனி வரக்கூடிய மாதங்களாவது அனைவருக்கும் நல்லதாக இருக்கட்டும். இந்த ஆண்டை தன்னால் மறக்கவே முடியாது." என்று கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் வனிதா பீட்டர் பால் ஜோடி மாலையும், கழுத்துமாக பணமாலையை அணிந்துகொண்டு வழிபட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News