×

பவர்ஸ்டாரை மூன்றாவதாக மணமுடிக்கும் வனிதா.... இசையமைப்பாளரும் இவர் தானாம்!!!

பவர்ஸ்டாரை மூன்றாவதாக மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறுகிறார் வனிதா. 
 
bb8de1cd-a355-4b00-a066-ff14addc9cb2

நாயகனாக, குணசித்திர நடிகராக, நகைச்சுவை நடிகனாக தயாரிப்பாளராக அரசியல்வாதியாக பல்வேறு பொறுப்புகளில் வலம் வந்து கொண்டிருக்கும் பவர்ஸ்டார் சீனிவாசன் அடுத்து இசையமைப்பாளராக அடி எடுத்து வைக்கிறார்.

2 எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் ".பிக்கப் " படத்தில்தான் அவர் இசையமைப்பாளராக களம் இறங்குகிறார். பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் ஜோடியாக நடிக்கிறார்.

power

மேலும் இதில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், 'ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி  காயத்திரி, ஹர்சிதாதேவி, லட்சுமி பாலா, தீபிகா, குட்டி சரிதா, வெங்கய்யா பாலன், அகஸ்தியா என்று நட்சத்திரப்பட்டாளமே இதில் உள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை, மதுரை ஆகிய இடங்களில் படம் வளர்ந்து வருகிறது.

பவர்ஸ்டாரை மூன்றாவதாக மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறுகிறார் வனிதா. அந்தபங்களாவில்  பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து சொல்கிறோம். 

power

படத்தில் காமெடி பிரதானமாக இருக்கும். " பிக்கப்" படம் எனக்கு நூறாவது படமாகும். என் திரை உலக அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி. இயக்கத்துடன் செமத்தியான பாடல்களுக்கு ட்யூன் போட்டு இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறேன்.

இந்தப் படத்தோட டைட்டிலில் வனிதாவுக்கு " வைரல் ஸ்டார்" என்ற பட்டத்தோடு பெயரை போடுகிறோம்". என்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன்.

From around the web

Trending Videos

Tamilnadu News