×

மத்தவங்களோடு கம்பேர் பண்ணாதீங்க!.. வனிதாவும் ரம்யா கிருஷ்ணனும் மோதிய வீடியோ.....

 
vanitha vijayakumar

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் வனிதா விஜயகுமார் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார்.. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அதன்பின் ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

ஆனால், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக திடீரென அவர் அறிவித்தார்.. ஒரு சீனியர் பெண்மனி தன்னை அவமானப்படுத்துவதாக அவர் கூறியிருந்தார்.  கணவர், குடும்பம் என அந்த ஆதரவும் இல்லாமல் வாழ்க்கையில் வெற்றி பெறுவது சில பெண்களுக்கு பிடிக்கவில்லை என அவர் காரணம் கூறியிருந்தார். 

vanitha

வனிதா விஜயகுமார் கூறும் அந்த பெண்மணி ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் என்பது பின்னர் தெரியவந்தது. அதாவது, வனிதாவின் நடிப்புக்கு மிகவும் குறைவான மதிப்பெண்ணை ரம்யா கிருஷ்ணன் கொடுத்தார் எனவும், 10க்கு வெறும் ஒரு மதிப்பெண்ணை மட்டுமே கொடுத்ததால் கடுப்பான வனிதா இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற முடிவெடுத்ததாகவும் செய்திகள் வெளியானது.

இதுபற்றி கருத்து தெரிவித்த ரம்யா கிருஷ்ணன் ‘அந்த நிகழ்ச்சியின் போது என்ன நடந்தது என்பதை வனிதாவிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும். இது எனக்கு பெரிய பிரச்சனை கிடையாது. இதில் நான் பதில் கூற எதுவுமில்லை’ என கூலாக பதில் கூறினார்.

vanitha

இந்நிலையில், வனிதாவுக்கும், ரம்யா கிருஷ்ணனுக்கும் மோதல் உருவான காட்சியை புரமோ வீடியோவாக விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. காளி வேடத்தில் வனிதா நிற்கிறார். அப்போது, என்னை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள் என ரம்யா கிருஷ்ணனிடம் அவர் கூற, கோபமடைந்த ரம்யா கிருஷ்ண. இது போட்டி.. மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம் என எப்படி நீங்கள் கூற முடியும? என கோபமாக கத்த, வனிதா அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறார். ‘இனிமேல் என்னவெல்லம நடக்குமோ’ என பின்னணியில் குரல் ஒலிக்க அந்த புரமோ முடிவடைகிறது. இந்த எபிசோட் வருகிற 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. அப்போது வனிதா -ரம்யா இருவருக்குமான மோதல் முழுதாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News