மாட்டிகிச்சே..மாட்டிகிச்சே... மீண்டும் காதலிக்கிறேன்... இப்போ யாரும்மா வனிதா?
சர்ச்சைகளுக்கு மிகவும் பெயர் போனவர் தான் வனிதா. பிக்பாஸ் 3வது சீசன் மூலம் படு பிரபலமானார், இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி பின் மீண்டும் வீட்டிற்கு நுழைந்தார்.
Thu, 17 Dec 2020

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சில மாதங்களிலேயே அவர்களுக்குள் பிரச்சனை வர பிரிந்தனர்.
வனிதாவும் தனது பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் மீண்டும் காதலிக்கிறேன் என பதிவு செய்துள்ளார். ஆனால் அப்படி எதற்காக பதிவு செய்தார், என்ன விஷயம் இருக்கிறது என்பதை பொறுத்திருந்து தெரிந்துகொள்வோம்.