×

லாஸ்லியாவிடம் பேசினேன்.. ஆனால்!... முக்கிய அப்டேட் கொடுத்த வனிதா விஜயகுமார்....

 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் லாஸ்லியா. அவரின் தந்தை மரியநேசன் இன்று கனடாவில் மாரடைப்பு காரணமாக  மரணமடைந்துள்ளார். எனவே, பலரும் அவருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வனிதா விஜயகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘லாஸ்லியாவிடம் பேசினேன்.ஆனால், அவள் அழுது கொண்டே இருக்கிறாள். அவள் இலங்கைக்கு விமானத்தில் செல்ல தயாராகி கொண்டிருந்தாள்.விஜய் தொலைக்காட்சி எம்பஸி மூலம் சில உதவிகளை செய்து வருகிறது. கொரோனா பிரச்சனையால் அவரின் தந்தையின் உடல் இலங்கை வர சில நாட்களாகும் எனத்தெரிகிறது. மேலும், நானும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலரும் அவருக்கு உதவி வருகிறோம். விரைவில் அவளை விமானம் மூலமாக இலங்கைக்கு அனுப்பி வைப்போம்’ என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News