ஹீரோயினாகும் `பிக்பாஸ்’ வனிதா... பரபர தகவல்கள்

விஜய்யின் `சந்திரலேகா’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானாலும் கோலிவுட்டில் வனிதாவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. திருமணம், குழந்தைகள் என குடும்பத்தோடு செட்டில் ஆகியிருந்த வனிதா, பிக்பாஸ் சீசன் 3 மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார்.
அதன்பிறகு, பிக்பாஸ் ஹவுஸ் சர்ச்சை, பீட்டர் பாலுடன் திருமணம், பிரிவு என தொடர்ந்து லைம் லைட்டிலேயே இருந்தார் வனிதா. இந்தநிலையில், பாம்புச் சட்டை இயக்குனர் ஆதம் தாசன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க வனிதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஹீரோயின் சப்ஜெக்டான இந்தப் படத்தில் சோலோ ஹீரோயினாக வனிதா நடிக்க இருப்பதாகவும், படத்துக்கு `அனல் காற்று’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல் றெக்கை கட்டி பறக்கிறது. படத்தின் காமெடி நடிகர் கருணாகரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.