Connect with us
vanitha vijaya kumar

Cinema News

பீஃப் பிரியாணி சமைத்த வனிதா… விளாசும் நெட்டிசன்கள்…..

கோலிவுட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் நடிகை வனிதாவை தெரியாத நபர்கள் இருக்கவே முடியாது. ஏனெனில் வனிதா அந்த அளவிற்கு சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளார். நடிகை, தயாரிப்பாளர், சமையல் கலைஞர் என பன்முக திறமை கொண்ட வனிதா தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

வனிதா ஒரு நடிகை என்பதை தாண்டி சிறந்த சமையல் கலைஞர் என்பது தான் உண்மை. இவரின் சமையல் திறமையை விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நாம் அனைவரும் பார்த்திருப்போம். அந்த சீசனில் வனிதா தான் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கிய வனிதா சமீபகாலமாக அதில் சமையல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வனிதா வெளியிட்ட சமையல் வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சோசியல் மீடியாவில் பலரும் இந்த வீடியோவை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

vanitha vijaya kumar

vanitha vijaya kumar

அதன்படி நடிகை வனிதா அவரது யூடியூப் சேனலில் மலபார் பீஃப் பிரியாணி செய்வது எப்படி என்று பிரியாணி செய்வதை வீடியோவாக எடுத்து பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிலர் இந்த வீடியோவை பார்த்து உங்கள் ரெசிபி நன்றாக இருக்கிறது என கமெண்ட் செய்து உள்ளனர்.

ஆனால் பலர் இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீங்கள் எப்படி பீஃப் சமைத்து அதை வீடியோவாக போடலாம்? நீங்கள் எல்லாம் இந்துவா? அதை பார்க்கவே கோபமாக வருகிறது. வனிதா நீங்கள் வெளியிட்ட மோசமான வீடியோ இதுதான் என்று கமெண்ட் செய்தும், வனிதாவை கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள வனிதா, “மக்களே சில். என்ன ஆச்சு உங்களுக்கு. என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் நிறைய மலையாளிகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் உள்ளனர். இது வெறும் ரெசிபிதான். நம்பிக்கை என்பது தனிப்பட்ட விஷயம். அதை பிறர் மீது திணிக்க கூடாது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு பிடித்த விஷயத்தை வைத்து இதே பிரியாணியை சமைத்து கொள்ளலாம்” என கூறியுள்ளார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top