×

பீட்டர் போனா என்ன? நமக்கு ஆளா இல்லை! வீழ்வேன் என்று நினைத்தாயோ!  அடுத்து யாரு?

வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த நிலையில் அந்த செய்தி சமூக ஊடகங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக உருவானது.

 

வனிதா விஜயகுமார் தனது சொந்த வாழ்வில் எடுத்த இந்த முடிவில் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, நாஞ்சில் விஜயன் என பலரும் மூக்கை நுழைக்க அனைவருக்கும் அசராமல் பதில் கொடுத்தார் வனிதா.

தொடர்ந்து வெளியூர்களுக்கும் சுற்றுலாதளங்களுக்கும் ஜோடியாக சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த வனிதா மற்றும் பீட்டர் பால் கோவாவிற்கு சுற்றுலா சென்று வந்த நிலையில் அங்கு இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு இப்பொழுது முற்றிப்போய் வாய்க்கால் தகராறு ஆகி பிரிந்துவிட்டனர்.

சில காலங்களாகவே பீட்டர் பால் இல்லாமல் தன்னுடைய யூடியூப் சேனலை நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்த வனிதா  திடீரென தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ‘ஆந்திரா பச்சி புலுசு’ என்ற ரெசிபியை  பதிவிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், ‘தற்போது உங்களுடைய யூடியூப் சேனலில் எடிட்டிங் மற்றும் கிராபிக்ஸ் வேலையை யார் பார்ப்பது’ என்று கேட்டிருந்தார்.

அதற்கு வனிதா, ‘என்னுடைய யூடியூப் பார்ட்னர் & டெக்னிக்கல் டீம்’ என்று தனது பதிவில் தெரிவித்து இருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News