Connect with us

Bigg Boss

என்னது த்ரிஷா இல்ல நயன்தாராவா? உங்க பொண்ணுனா என்ன வேணா பேசிடுவீங்களா? அடங்காத வனிதா விஜயகுமார்..!

Vanitha vijayakumar: நடிகை வனிதா விஜயகுமார் அவரின் சொந்த வாழ்க்கையில் ட்ரெண்ட் ஆனதை விட அவரின் பிக்பாஸ் பயணத்தால் தான் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் கொடுத்தார். நெகட்டிவ் பப்ளிசிட்டி தான் என்றாலும் அதை அவர் பெரிதாக கவலைப்படாமல் தற்போதைய சீசனில் தன்னுடைய மகள் ஜோவிகாவை களமிறக்கி இருக்கிறார்.

நடிகை வனிதா அப்பாவுடன் சண்டை, சில கல்யாணம் என வைரலாக இருந்தவரை பிக்பாஸுக்கு விஜய் டிவி அழைத்து வந்தது. வாயை அடக்காதவர் ஓவர் சண்டை போட நெகட்டிவ் பப்ளிசிட்டி அவருக்கு கிடைத்தது. இதனால் எலிமினேட் ஆகிக்கூட ஒருமுறை வாய்ப்பு கொடுத்தனர்.

இதையும் படிங்க: ரைட்டு அடுத்த பிரச்னை தொடங்கியாச்சு… லியோ பட தயாரிப்பாளர் மீது கடுப்பில் இருக்கும் லோகேஷ்… சேதி என்ன தெரியுமா?

தொடர்ந்து பிபி அல்டிமேட்டில் களமிறங்கினார். அதில் கமல் நிகழ்ச்சியில் இருந்து ஒதுங்க ரம்யா கிருஷ்ணன் வந்துவிடுவாரோ என நினைத்து வனிதா நிகழ்ச்சியை விட்டே வெளியேறினார். அதை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன் பிக்பாஸை ரிவியூ செய்யும் பணியில் அட்ராசிட்டி செய்து வருகிறார்.

இந்த சீசனில் அவரின் மூத்த மகள் ஜோவிகாவை களமிறக்கினார். முதல் சில வாரம் அவரும் சரியாக விளையாடி வந்தார். ஆனால் புல்லி கேங் டீமில் இணைய ஜோவிகாவின் ஆட்டம் மோசமாக சரிந்தது. நிகழ்ச்சியில் விழுந்து அடிப்பட, தூங்க அவர் கொடுத்து வரும் கண்டெண்ட்டுகள் ரசிகர்களுக்கே சலித்து விட்டது போல. இந்த வார வோட்டிங்கில் ஜோவிகா தான் கடைசி இடத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க: பிரதீப்கிட்ட இத பத்தி பேசுனேன்! ஆனா அவன் என்ன சொன்னான் தெரியுமா? மூஞ்சி பஞ்சர் ஆகியும் அடங்காத வனிதா

சமீபத்தில் நள்ளிரவு ஒரு மணி அளவில் ப்ரதீப்பின் ஆதரவாளர் எனக் கூறிய ஒருவர் என்னை தாக்கி விட்டார் என புகைப்படத்துடன் வனிதா ஒரு போஸ்ட்டை வெளியிட்டார். அதனை தொடர்ந்து சில நாட்களாக ரிவியூ செய்யாமல் இருந்தவர். நேற்று பார்பி டைப்பில் ஒரு கண்ணாடியை போட்டுக் கொண்டு கொடுத்த ரிவியூ தான் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Bigg Boss

To Top