பிக்பாஸ் அல்டிமேட் விஜய் ஹாட் ஸ்டாரில் விறுவிறுப்பாக போய்கொண்டிருக்கும் நிலையில் தற்போது நடிகர் சிம்பு அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது நிகழ்ச்சி இன்னும் சூடுபிடித்துள்ளது.
மொத்தம் 17 போட்டியாளர்கள் பங்கு கொண்டு ஆரம்பித்த இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஒருத்தர் எவிக்ட் ஆகி வருகின்றனர். ஏற்கெனவே தாடி பாலாஜி, வனிதா விஜயகுமார் எவிக்ட் ஆகி விட்டனர்.
அதேபோல் கடந்த வாரம் பாடலாசிரியன் சினேகன் அவர்களும் நிகழ்ச்சியில் எவிக்ட் ஆகியுள்ளார். இந்நிலையில் வனிதா விஜயகுமார் , தாடி பாலாஜி , சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா ரவி இவர்கள் அனைவரும் ஒரு கெட் டுகெதர் நடத்தி தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அப்பொழுது எடுத்த புகைப்படங்களை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எப்படி இருந்தாலும் வீட்டிற்குள் சண்டை போட்டு கொண்டு வெளியில் சந்தோஷமாக இருப்பதை பார்க்கும் ரசிகர்களுக்கும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…