Categories: Cinema News latest news

அப்பனாவே இருந்தாலும் தப்பு தப்புதான்! – ஜெயிலர் பார்த்திவிட்டு பொங்கி எழுந்த வனிதா..

நேற்று வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் நேற்று வெளியானது.

நாளுக்கு நாள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டிருந்தது. இந்த படத்திற்காக ஆவலாக காத்திருந்த ரசிகர்கள், படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர். பலரும் சமூக வலைதளங்களில் ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு, தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க- பிரபுதேவா மீது இருந்த காதலால் நான் அதையே நிறுத்தினேன்! – பலவருட ரகசியத்தை சொன்ன வனிதா!..

அதே போல பல பிரபலங்களும் ஜெயிலர் படத்தை பார்ததுவிட்டு, தங்களது கருத்தை கூறி வருகின்றனர். இந்த நிலையில், நடிகை வனிதா விஜயகுமார், தன் மகளோடு, ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு, வந்து வெளியே இந்த படம் குறித்து தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினி மிக ஸ்டைலாக இருந்தார். படம் மிக அருமையாக இருந்தது.

நான் ரொம்ப அதிகமாக எதிர்பார்த்து வந்தேன். என் எதிர்ப்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்துவிட்டது. நெல்சன், பீஸ்டாக உழைத்து, இந்த படத்தை எடுத்திருக்கிறார். ரஜினிக்கு தாறுமாறாக பல காட்சிகள் இருந்தது. படம் முழுவதுமே நன்றாக இருந்தது. மிகவும் ரசித்தேன் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த படத்திலிருந்து என் வாழ்க்கையோடு ஒப்பிடும் ஒரு மெசேஜும் உள்ளது. ஜெயிலர் படத்தில் யார் செய்தாலும் தப்பு தப்பு தான் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல தான் என் வாழ்க்கையிலும், கொஞ்சம் வித்யாசமாக அப்பனாவே இருந்தாலும் தப்பு தப்பு தான் என்று தன் தந்தை நடிகர் விஜயகுமாரை சுட்டி காட்டி பேசியுள்ளார் வனிதா விஜயகுமார்.

இதையும் படிங்க- அம்மா இறந்த அப்போ.. யார் என்ன சொன்னாலும் பரவாயில்லைனு.. அப்படி செய்தேன்- வனிதா

prabhanjani
Published by
prabhanjani