Connect with us

Bigg Boss

என் பொண்ணு அப்படி பேசல!.. வக்காளத்து வாங்கிய வனிதா.. அம்மாவையே மிஞ்சிட்டாங்களா ஜோவிகா?..

பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை ஜோவிகா வெல்வதற்காக வெளியே வனிதா விஜயகுமார் ஏகப்பட்ட வேலைகளை பார்த்து வருவதாக பிக் பாஸ் ரசிகர்கள் புகார் எழுப்பி வருகின்றனர். ஆரம்பத்தில் விசித்ராவை விளாசி ஜோவிகாவுக்கு ஃபயர் விட்ட நிலையில், அதே குரூப் தற்போது ஜோவிகாவை ஓரங்கட்டி விட்டு விசித்ராவுக்கும் புதிய வரவான அர்ச்சனாவுக்கும் ஃபயர் விட்டு வருகின்றனர்.

இந்த சீசன் பிக் பாஸ் டைட்டிலை கண்டிப்பாக ஆண் போட்டியாளர் வெல்லக் கூடாது என்கிற பிளான் உடன் தான் பிரதீப் ஆண்டனியை வெளியே அனுப்பி இருப்பதாகவும் ஸ்ட்ராங்கான பெண் போட்டியாளர் தான் வெற்றிக் கோப்பையை ஏந்தப் போகிறார் என்றும் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

இதையும் படிங்க: சிவாஜி சொன்ன ‘நோ’வால் நடிகையின் தலையெழுத்தே மாறிய சம்பவம்! எப்படி என்ன நடந்தது தெரியுமா?

வனிதா விஜயகுமாரின் மூத்த மகளான ஜோவிகா தமிழில் ஒரு படத்திலும் தெலுங்கில் ஒரு படத்திலும் கமிட் ஆகி உள்ள நிலையில், அதற்கு முன்னதாக பிக் பாஸ் பிரபலம் என்கிற பெயருடன் என்ட்ரி கொடுக்க வனிதா மூலமாக விஜய் டிவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என ஆரம்பத்திலேயே நெப்போடிச சர்ச்சை வெடித்தது.

ஆனால், ஜோவிகா முதல் வாரத்திலேயே போல்டாக வாய் திறந்து பேசியதும் எல்லாருமே சூப்பர் என ஜோவிகாவுக்கு ஆர்மியெல்லாம் ஆரம்பிக்க அதன் பிறகு எப்போதுமே அவர் அப்படிதான் ஓவர் வாய் என்பதை தெரிந்துக் கொண்ட பின்னர் அவரை உடனடியாக வெளியே அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கைகள் கிளம்பி உள்ளன.

இதையும் படிங்க: ரஜினி முதல் விஜய் வரை திருந்தவே மாட்டாங்க!.. இனிமேல் இதுதான் தலையெழுத்து.. ப்ளூ சட்டை மாறன் செம கிழி!..

இந்நிலையில், அர்ச்சனாவை பார்த்து வாயை மூடு என ஜோவிகா செய்ததும், அசிங்கமான வார்த்தை போட்டும் அவர் பேசியதாக சர்ச்சை வெடித்த நிலையில், அப்படியெல்லாம் என் பொண்ணு பேசல என வனிதா விஜயகுமார் ட்வீட் போட்டு பிக் பாஸ் வீட்டை விட வெளியுலகில் தான் விஷம் நிறைந்திருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top