×

தனது மகனை இந்த உலகிற்கு அறிமுகம் செய்த வரலட்சுமி...

சரத்குமாரின் மகளான வரலட்சுமி நடிப்பில் மட்டுமின்றி சமூக வளைதளத்திலும் மற்றும் பெண்கள் சார்ந்த அமைப்பிலும் மிக ஆக்டிவ்வாக இருப்பவர் தற்போது தனது மகனை அறிமுகம் செய்துள்ளார்.
 
Varalakshmi-Sarathkumar-images

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி படம் மூலம் நடிகையானவர் சரத்குமாரின் மூத்த மகளான வரலட்சுமி. தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி.

நடித்தால் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்றெல்லாம் அவர் அடம் பிடிப்பது இல்லை. மோசமான வில்லியாக நடிக்கச் சொன்னாலும் சந்தோஷமாக நடிப்பார். அவர் ஏதாவது ஒரு படத்தில் வில்லியாக நடித்தால் தன் நடிப்பால் ஹீரோயினையே ஓரங்கட்டிவிடுவார்.

எந்த படத்தில் நடித்தாலும் தன் நடிப்பை பற்றி ரசிகர்களை பேச வைத்துவிடுவார் வரலட்சுமி. கொடுத்த கதாபாத்திரமாகவே மாறுவதற்கு பெயர் போன அவர் தன் மகனை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் ஒரு நாய்க்குட்டியை தான் தன் மகன் என்று அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அந்த செல்ல நாய்க்கு குச்சி வரலட்சுமி என்று பெயர் வைத்துள்ளார். எம். குமரன் படம் போன்று என் மகனுக்கு என் பெயரே போதும் என்று குச்சி வரலட்சுமி என்று பெயர் வைத்திருக்கிறார் போன்று.

சும்மமா சொல்லக் கூடாது குச்சி ரொம்ப க்யூட்டாக இருக்கிறது. சிம்பா ஹாலிவுட் பட பாணியில் அவர் குச்சியை அறிமுகம் செய்து வைத்தது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News