தப்பான கேள்வி கேட்குறீங்க.. விஷால் பற்றிய கேள்விக்கு கட் அண்ட் ரைட்டா சொன்ன வரலட்சுமி

by Rohini |
vishal
X

எதிர்பார்ப்புடன் மதகஜராஜா: வரும் 12ஆம் தேதி விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் மதகஜராஜா திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. கிட்டத்தட்ட 12 வருட போராட்டத்திற்கு பிறகு இந்த படம் வெளியாக இருக்கின்றது. அதுவும் சுந்தர் சி இயக்கத்தில் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு முழு நகைச்சுவை திரைப்படமாக இந்த படம் வெளியாக இருக்கிறது.

விஷாலின் உடல்நிலை:இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடைபெற்றது. விழாவிற்கு குஷ்பூ ,வரலட்சுமி சரத்குமார் ,அஞ்சலி என பல பேர் கலந்து கொண்டனர். விஷால் இந்த விழாவிற்கு வரும்பொழுது மிகவும் சோர்வுற்று இருப்பதை பார்க்க முடிந்தது. மேடையில் பேசும்போது அவருடைய கைகள் நடுங்கியபடி தள்ளாடி நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் அவருக்கு காய்ச்சல் என தகவலும் வெளியானது. ஆனால் உண்மையில் அவருடைய உடல்நிலை முன்பை விட இப்போது கொஞ்சம் மோசமாக இருப்பதாகவே தகவல்கள் கிடைத்து இருக்கிறது. அதுவும் அவன் இவன் திரைப்படத்திற்கு பிறகு அவருடைய உடல் நிலையில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் தலைவலியால் நீண்ட நாட்கள் அவதிப்பட்டதாகவும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் கூறினார்கள்.

ஓடி வந்த விஷாலின் நண்பர்கள்:இப்போது ஆர்யா உள்பட விஷாலின் நெருங்கிய நண்பர்கள் எப்படியாவது விஷாலை திரும்பவும் பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியிலும் இறங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமாரிடம் உண்மையில் விஷாலுக்கு என்ன ஆச்சு என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வரலட்சுமி ‘விஷாலுக்கு என்ன ஆச்சா? தப்பான ஒருத்தரிடம் இந்த கேள்வியை கேக்குறீங்க. இருந்தாலும் பரவாயில்லை. அவர் திரும்பவும் நல்லபடியாக வருவார் என நான் நம்புகிறேன்.


இந்த படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். சண்டை காட்சிகளும் சிறப்பாக வந்திருக்கின்றன. சீக்கிரம் அவர் மீண்டு வருவார்’ என வரலட்சுமி அந்த கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். ஏற்கனவே வரலட்சுமி பற்றியும் விஷால் பற்றியும் பல கிசுகிசுக்கள் எழுந்தன. இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் தகவல் வெளியானது. ஆனால் வரலட்சுமி தரப்பில் இதற்கு பச்சைக் கொடி காட்டியதாகவும் ஆனால் சில பல காரணங்களால் தான் இவர்கள் இருவரும் பிரிந்தார்கள் என்றும் தகவல் வெளியானது. அதனால் இப்போது விஷால் பற்றிய அந்த கேள்விக்கு தப்பான ஒருவரிடம் கேள்வியை கேக்குறீங்க என பதில் அளித்தார் வரலட்சுமி.

Next Story