Connect with us

Cinema News

பப்புல என் பின்னாடி தட்டுனான்! வாலிபரை தூக்கி போட்டு மிதித்த வரலட்சுமி!..

2012 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை வரலெட்சுமி சரத்குமார். இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கூட இதுதான் முதல் படமாக இருந்தது. இந்த திரைப்படம் வெளியானபோது பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் சில நாட்கள் கடந்து அந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது.

அதற்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார் வரலெட்சுமி சரத்குமார். பிறகு வில்லியாக நடிப்பதற்கு வாய்ப்புகளை பெற்ற வரலெட்சுமி தொடர்ந்து சர்க்கார், சண்டை கோழி, யசோதா என பல படங்களில் வில்லியாக நடிக்க துவங்கினார்.

தற்சமயம் பேட்டி ஒன்றில் பேசும்போது சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது “அப்போது எனக்கு 20 வயதிருக்கும். பப்பிற்கு நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒருத்தன் வந்து என் பின்னாடி தட்டிவிட்டு சென்றான். அநேகமாக அவனுக்கு ஏழரை சனி இருந்திருக்க வேண்டும்.

என் நண்பர்கள் எல்லாம், அந்த பையன் பாவம் இந்த பொண்ண போய் தொட்டுவிட்டானே என நினைத்தார்கள். நான் அவனை இழுத்து கீழே போட்டு மிதித்து அவனது கண்ணாடியை உடைத்தேன். இன்னும் நிறைய செய்தேன். அதெல்லாம் வெளியில் சொல்ல முடியாது.

நான் அடித்த அடிக்கு அவன் இன்னொரு பெண்ணை தொடவே பயப்படுவான். அவன் மனைவியை தொடுவதற்கே பயப்படுவான். அப்படியொரு சம்பவத்தை செய்தேன் என தன் பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சினிமாவிற்கு குட்பையா? திடீரென வைரலாகும் விஜய் குறித்த செய்திகள்

Continue Reading

More in Cinema News

To Top