அவரோட பொண்ணா ஒரு ஆணியும் புடுங்கல - வரலக்ஷ்மி வெளிப்படை பேச்சு!
வரலக்ஷ்மி சரத்குமார்:
மனதில் பட்டதை எப்போதும் வெளிப்படையாக பேசக்கூடியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் சிம்புவுடன் சேர்ந்து போடா போடி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் .

திரைப்படங்களில் நடிக்கவே தன்னுடைய தந்தை அனுமதிக்கவில்லை பிறகு அவரை எப்படியோ சமாதானம் செய்து அவரிடம் பர்மிஷன் வாங்கி தான் நான் அந்த திரைப்படத்தில் நடித்தேன் என வரலட்சுமி கூறியிருந்தார். முதல் திரைப்படமே அவருக்கு பெயரும் புகழும் பெற்று கொடுத்தது .
திரைப்படங்கள்:
தொடர்ந்து மத கஜ ராஜா, தாரை தப்பட்டை, சர்க்கார் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளத்தில் நடித்திருந்தார். ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென வில்லி கதாபாத்திரம் ஏற்று நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அந்த முடிவெல்லாம் ஒரு சாதாரண ஹீரோயின் எப்போதும் எடுக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ஒரு துணிச்சலான முடிவுகளை துணிந்து எடுக்கக் கூடியவர் வரலட்சுமி சரத்குமார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் நடிகை வரலட்சுமி நான் எப்போதுமே என்னுடைய தந்தையின் பெயரிலோ புகழிலோ என்னுடைய வாழ்க்கை நகர்த்தி சென்றது கிடையாது .

ஒரு ஆணியும் புடுங்கல...
எப்பவுமே யாரும் தன்னுடைய தாய் தந்தையோட பெயரும் புகழிலும் நம்முடைய வாழ்க்கை மேன்மையா வாழ்வது கூடாது. பெற்றோருக்காக நாம் என்ன பெருமை சேர்த்தோம் அப்படிங்கறத தான் நாம யோசிக்கணும். எனவே நானும் நடிகர் சரத்குமாரின் பெண்ணா ஒரு ஆணியும் புடுங்கல. நான் எனக்கான தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளேன் என வெளிப்படையாக தெரிவித்தார்.
