செம ஒல்லியாகி ஆளே மாறிப்போன வரலக்ஷ்மி சரத்குமார்!
வரலக்ஷ்மி சரத்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
Tue, 26 Jan 2021

தமிழ் சினிமாவில் அதிகமான வாரிசு நடிகைகள் இருந்தாலும் வரலட்சுமி சரத்குமாருக்கு என்று தனி ஒரு இடமும் மரியாதையும் இருக்கின்றது. இதற்கு காரணம் சரத்குமாரின் மகள் என்பதையும் தாண்டி திறமையான நடிகை என்பது தான். இவருடைய துணிச்சலான நடிப்பும், வெளிப்படையான பேச்சும் அநேகரை கவர்ந்திருக்கின்றது.
இந்நிலையில் தற்போது தனது உடல் எடையை பாதியாக குறைத்து சேலையில் செம கிக்குனு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த போட்டோவை பார்த்ததும் எல்லோரும் " என்ன மேடம் இப்படி ஸ்லிம் ஆகிட்டீங்க " என ஷாக்காகி கமெண்ட் செய்துள்ளனர்.