×

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தன் தாயாருடன் சேர்ந்து உதவிய வரலக்ஷ்மி!

கொரோனா ஊரடங்கினால் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் குஜராத் மாநிலத்திலிருந்து பீகாரிலுள்ள மோசாபூருக்கு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளியான பெண்மணி ஒருவர் பசியின் காரணமாக உயிரிழந்தார். அதனை அறியாத அந்த பெண்ணின் 2வயது குழந்தை உடம்பில் மூடப்பட்டிருந்தன போர்வையை மாற்றி, தன்னுடைய அம்மாவை எழுப்ப முயற்சித்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி பலரையும் கண்ணீரில் கலங்கடித்து.

 

தற்போது ஊரடங்கில் கொஞ்சம் தளர்வு ஏற்பட்டு ரெயில் சேவைகள் இயக்கியுள்ளதால் மக்கள் அவரவர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது தயார் சாயா சரத்குமாருடன் சேர்ந்து ரயில்களில் பயணிப்பவர்களுக்கு ரொட்டி பாக்கெட்டுகளை வழங்கியுள்ளனர்.  

இந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள வரலக்ஷ்மி, ரயில்களில் சென்னை வழியாக பயணிக்கும் 1600 பயணிகளுக்கு சென்னையில் 30 நிமிடங்கள் நிறுத்தப்படுகிறது. அந்த கேப்பில் 20 பெட்டிகளில் 80 பேர் இருப்பார்கள்.  ஒரு பெட்டியில் 8 ரொட்டிகளை பரிமாற 15 வினாடிகள் கொடுத்தனர், என் அம்மா மற்றும் மூன்று சேவ் சக்தி தன்னார்வலர்களுடன் இணைந்து பாதுகாப்பான முறையில் இந்த உதவியை செய்ததாக தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News