தென்னிந்திய சினிமாவே திரண்டு வந்துடுச்சே!.. வரலட்சுமி சரத்குமார் வெட்டிங் ரிசப்ஷன் போட்டோஸ்!

 
தென்னிந்திய சினிமாவே திரண்டு வந்துடுச்சே!.. வரலட்சுமி சரத்குமார் வெட்டிங் ரிசப்ஷன் போட்டோஸ்!
வரலட்சுமி சரத்குமார் திருமணம் தாய்லாந்தில் கடந்த ஜூலை 2ம் தேதி நடைபெற்ற நிலையில் இதுவரை திருமண புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. திருமணத்தை தொடர்ந்து சென்னையில் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலர் பங்கேற்றனர். தென்னிந்திய சினிமாவே திரண்டு வந்துடுச்சே!.. வரலட்சுமி சரத்குமார் வெட்டிங் ரிசப்ஷன் போட்டோஸ்! நடிகர் சரத்குமாரின் முதல் மனைவிக்கு மகளாகப் பிறந்த வரலட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து வந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தென்னிந்திய சினிமாவே திரண்டு வந்துடுச்சே!.. வரலட்சுமி சரத்குமார் வெட்டிங் ரிசப்ஷன் போட்டோஸ்! இதையும் படிங்க:  ஒரு படத்துக்கு 4 இசையமைப்பாளர்களா? விஜய் நடித்த படத்தின் பாடல்கள் ஹிட்டான ரகசியம் இதுதான் ஜூலை இரண்டாம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் இதுவரை திருமண புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. தென்னிந்திய சினிமாவே திரண்டு வந்துடுச்சே!.. வரலட்சுமி சரத்குமார் வெட்டிங் ரிசப்ஷன் போட்டோஸ்! நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா, கன்னட திரை உலகின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப், மலையாள திரை உலகின் முன்னணி நடிகரும் சமீபத்தில் கேரளாவில் பாஜகவை காலூன்ற வைத்த சுரேஷ் கோபி என ஒட்டுமொத்த தென்னிந்திய பிரபலங்களும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தென்னிந்திய சினிமாவே திரண்டு வந்துடுச்சே!.. வரலட்சுமி சரத்குமார் வெட்டிங் ரிசப்ஷன் போட்டோஸ்! இதையும் படிங்க:  சென்னை வந்தாலும் சூர்யா வீட்டில் தங்காத ஜோதிகா!.. அப்படி என்ன பஞ்சாயத்து?!… நடிகர் ரஜினிகாந்த் முன்னதாக நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், நேற்று நடைபெற்ற ரிசப்ஷனில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பங்கேற்றார். நடிகர் சித்தார்த், இசையமைப்பாளர் தமன் என பல பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்திய சினிமாவே திரண்டு வந்துடுச்சே!.. வரலட்சுமி சரத்குமார் வெட்டிங் ரிசப்ஷன் போட்டோஸ்! மெரூன் கலர் உடையில் மாப்பிள்ளை நிக்கோலாய் சச்தேவ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் மணமக்களாய் ரிசப்ஷன் மேடையில் ஜொலித்தனர். இதையும் படிங்க:  ஒரு முறை சொல்லிட்டா பின்வாங்குறதே இல்ல! தொடர்ந்து கேப்டன் குடும்பத்துக்காக உதவிக்கரம் நீட்டும் லாரன்ஸ்

From Around the web