டீசர் வீடியோ செலவுல ஒரு படமே எடுக்கலாம்!.. வாரணாசி பட்ஜெட் இவ்வளவு கோடியா?..
Varanasi: தெலுங்கு சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் ராஜமௌலி. இவர் இயக்கிய பாகுபலி, பாகுபலி 2, RRR போன்ற படங்கள் இந்திய அளவில் கவனம் பெற்றது. அதோடு தற்போது பேன் இந்தியா திரைப்படங்களை பலரும் எடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இவர்தான்.
தற்போது மகேஷ்பாபு நடிப்பில் வாரணாசி என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாகவும் பிரித்திவிராஜ் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். கீராவாணி இசையமைத்திருக்கிறார்/ கடந்த 15ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோவை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வெளியிட்டார்கள். அதில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள்.
வாரணாசி டைட்டில் டீசர் வீடியோ பிரம்மாண்டமாக இருந்தது. முனிவர்களின் தவத்தால் வானிலிருந்து விண் கல் அட்லாண்டிக் கடலில் விழுகிறது. அதன்பின் தென்னாப்பிரிக்க காடுகள், ராமாயண போர் நடந்த காலகட்டம் ஆகியவற்றை காட்டுகிறார்கள். இறுதியில் ராமர் அம்பை விட அந்த வெளிச்சம் வாரணாசியில் உள்ள கங்கை நதியில் விழுகிறது. அதன்பின் மகேஷ் பாபு சிவபெருமானை போல ஒரு காளை மாட்டின் மீது அமர்ந்து வருவது போல டீசர் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த டீசர் வீடியோவை வெளியிட நடத்திய விழாவிற்கு மட்டும் 27 கோடி செலவு செய்தார்களாம். சுமார் ஒரு வருடம் கிராபிக்ஸ் டீம் அமர்ந்து இதை உருவாக்கி இருக்கிறார்கள். அதில் வரும் ஒரு பிரேமை உருவாக்க 48 மணி நேரம் ஆனதாக சொல்லப்படுகிறது. அதோடு இப்படத்தின் பட்ஜெட் 1200 கோடி என சொல்லப்படுகிறது. இந்திய சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திற்கும் யாரும் இவ்வளவு செலவு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல மொழிகளிலும் வெளிவரும் வாரணாசியில் வட மாநில மக்களுக்கு பிடித்த ராமரையும், சிவபெருமானையும் தொடர்புபடுத்தி காட்சிகள் இருப்பதாலும், ராமாயணத்தின் ஒரு பகுதி படத்தில் வருவதாலும் இப்படம் 2 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
