Varanasi: டைம் டிராவல்!.. 2 அவதாரம்!.. வாரணாசி படத்தோடு கதை இதுதானாம்!...
பாகுபலி, பாகுபலி 2, RRR ஆகிய மூன்று பேன் இண்டியா திரைப்படங்களை இயக்கி இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் ராஜமௌலி. பாகுபலிக்கு முன்பே தெலுங்கில் அவர் சிலர் படங்களை இயக்கியிருந்தாலும் பாகுபலி அவரை பெரிய அளவில் கொண்டு சேர்த்தது. ஏனெனில் இந்த படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூலை வாரி குவித்தது. அதிலும் பாகுபலி 2 திரைப்படம் 1500 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
தற்போது மகேஷ்பாபுவை வைத்து வாரணாசி என்கிற பேன் இண்டியா திரைப்படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி. இந்த படமும் பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் 800 கோடி எனவும், 1200 எனவும் இரு வேறு செய்திகள் உலா வருகிறது. எப்படி இருந்தாலும் படத்திற்கு பல நூறு கோடி செலவு செய்திருப்பது சமீபத்தில் படக்குழு வெளியிட்ட டைட்டில் டீசர் வீடியோவை பார்த்தாலே தெரிகிறது.
டைட்டில் டீசரை பார்க்கும்போது இது டைம் லுப் கதையாக இருக்கலாம் என தோன்றுகிறது. அதோடு ராமாயண யுத்தம் நடந்த காலம் தொடர்பான காட்சிகளும் அதில் காட்டப்பட்டிருப்பதால் ராமாயணம் தொடர்பான காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருக்கலாம் என பலரும் நினைக்கிறார்கள்.

இந்நிலையில்தான் இந்த படத்தின் கதை தற்போது தெரிய வந்திருக்கிறது. பல ஜென்மங்களுக்கு முன் ராமனாக இருக்கும் மகேஷ் பாபு பல ஜென்மங்கள் கழித்து மனிதனாக பிறந்து சிவனாக அவதாரம் எடுப்பது போலவும், டைட் டிராவலால் இது நடப்பது போலவும் கதையை எழுதி இருக்கிறாராம் ராஜமௌலி. சிவபெருமானனை போல கையில் சூலாயுதத்தை வைத்துக்கொண்டு மகேஷ்பாபு காளை மாட்டில் வருவது போன்ற காட்சிகள் டைட்டில் டீசர் வீடியோவில் இடம் பெற்றிருந்ததை பார்க்கும்போது இதை உண்மைதான் என தோன்றுகிறது.
அதேபோல், விஜய் ராமனாக இருக்கும்போது ராவணனாக இருந்த பிருத்திவிராஜும் மறு ஜென்மம் எடுத்து அவரை பழி வாங்க வருவாராம். போஸ்டரில் பிருத்திவிராஜுக்கு பின்னால் பல கைகள் காட்டப்பட்டிருந்ததுதான் இதன் குறியீடு என்கிறார்கள். சமீபகாலமாவே ஆன்மீகம் தொடர்பாக அதிக பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் பல நூறு கோடி வசூலை அள்ளுகின்றன. எனவே, வாரணாசி திரைப்படம் 2 ஆயிரம் கோடி வசூலை அள்ளினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
