Categories: Cinema News latest news

அந்த சம்பவத்தால் 4 நாள் ஷூட்டிங் கட்.. கடுப்பான விஜய்… கடைசியில் இதுதான் நடந்தது.!

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரிசு’படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா தவிர பிரகாஷ் ராஜ், ஷாம், சங்கீதா கிரிஷ், பிரபு, குஷ்பு சுந்தர், ஸ்ரீகாந்த், சம்யுக்தா சண்முகநாதன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

சமீபத்தில், இப்படத்தின் அடுத்த படபிடிப்பு தொடங்கியதாம். அந்த வகையில், மழை காரணமாக நான்கு நாள் ஒதுக்கப்பட்ட கால்சீட்டு வீணாகியதாக விஜய்யின் முகம் சற்று சுருங்கி போனதாக கூறப்படுகிறது. உடனே, அடுத்த இரண்டே நாளில் படப்பிடிப்பை தொடங்கி முடித்து காட்டியுள்ளார் இயக்குனர் வம்சி.

மேலும், படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகும் என்பதால் விஜய் தற்காலிகமாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று  தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்களேன்  – விஷாலை பார்த்து நடுங்கிய இளம் நடிகை… அப்படி என்ன செஞ்சாருனு தெரியுமா.?!

இந்த படத்தை விரைவில் முடித்துவிட்டு தனது அடுத்த படத்தை,  லோகேஷுடன் கைகோர்த்து தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் விக்ரம் படத்துடன் ஒத்து போகுமா என்று காத்திருக்கும் ரசிகர்ளுக்கு விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியானதும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan