Categories: Cinema News latest news

வாரிசு படத்தின் கலெக்சன் ரிப்போர்ட் முழுக்க முழுக்க பொய்… விஜய் ரசிகர்களை வம்பிழுக்கும் பிரபல தயாரிப்பாளர்…

விஜய்யின் “வாரிசு” திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவந்திருந்த நிலையில், பேமிலி ஆடியன்ஸிடையே ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனினும் விஜய் ரசிகர்களை இத்திரைப்படம் அவ்வளவாக ஈர்க்கவில்லை.

Varisu

“வாரிசு” திரைப்படம் வெளியாகி 20 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில் பாக்ஸ் ஆஃபீஸில் 250  கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் ரூ.135 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

“வாரிசு” திரைப்படம் “வாரிசுடு” என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது. அதே போல் “வாரிசு” திரைப்படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டது. இந்த நிலையில் “வாரிசு” திரைப்படத்தின் ஹிந்தி படம் 12 கோடி வசூல் ஆகியுள்ளதாகவும், தெலுங்கு படம் 23 கோடி வசூல் ஆகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Chitra Lakshmanan

இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் ஒரு நேயர் “வாரிசு படம் ஹிந்தியில் 12 கோடி கலெக்சன் ஆகியிருக்கிறது என்றும் தெலுங்கில் 22 கோடி கலெக்சன் ஆகியிருக்கிறது என்றும் கூறுகிறார்களே, இது உண்மையான தகவல்தானா?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

அதற்கு சித்ரா லட்சுமணன் “வாரிசு திரைப்படம் ஹிந்தியில் எவ்வளவு வசூல் ஆனது என தெரியவில்லை. ஆனால் தெலுங்கில் எவ்வளவு வசூல் ஆகியிருக்கிறது என்பது குறித்து எனக்கு தெரியும். இன்று காலையிலே கூட ஒரு தெலுங்கு தயாரிப்பாளரிடம் இது குறித்து பேசிக்கொண்டிருந்தேன்.

இதையும் படிங்க: அதை நினைச்சாலே என் வயிறு எரியுது… ஸ்ரீகாந்த் படத்தின் படப்பெட்டியை கடலில் தூக்கி எறிந்த தயாரிப்பாளர்…

Dil Raju

மாஸ்டர் திரைப்படம் தெலுங்கில் எவ்வளவு கோடி ரூபாய் வசூல் ஆகியிருந்ததோ அதை விட ஐந்து கோடி ரூபாய் குறைவாகத்தான் வாரிசு திரைப்படம் வசூல் செய்துள்ளதாக அவர் கூறினார். ஆனால் என்ன காரணத்தினாலோ மிக அதிகமான தொகையை வசூல் செய்திருப்பதாக வாரிசு படத்தின் தயாரிப்பாளர் கூறி வருகிறார், ஏன் அப்படி சொல்கிறார் என தெரியவில்லை எனவும் அந்த தெலுங்கு தயாரிப்பாளர் என்னிடம் கூறி வருத்தப்பட்டார்” என்று பதிலளித்திருந்தார்.

Published by
Arun Prasad