விஜய்யை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த 'வாரிசு' பட தயாரிப்பாளர்... வைரலாகும் ஸ்டில்ஸ்!

 
Vijay dil raju varisu

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக வலம் வந்த 'தளபதி' விஜய், இப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கிறார். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜன நாயகன்' ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது.

இது தான் நடிகராக விஜய்யின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை 'தீரன் அதிகாரம் ஒன்று' புகழ் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார்.

விஜய் நடிப்பில் 2023-ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'வாரிசு'. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தை இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்க, ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். 

'வாரிசு' பட ஆடியோ ரிலீஸில் தில் ராஜு பேசியதை ரசிகர்கள் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. நேற்று முன் தினம் (ஜூன் 22) தனது பிறந்தநாளை கொண்டாடிய விஜய்யை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு. அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.


 

From Around the web