Categories: Cinema News latest news

தயவு செஞ்சு எதாவது பண்ணுங்க அஜித்-விஜய்.! அடுத்த தலைமுறை சமூக விரோதிகளாக மாறிவிடும்.!

கடந்த சில வருடங்களாகவே இணையத்தில் விஜய் அஜித் ரசிகர்கள் சண்டை முற்றிதான் வருகிறது. அவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனை அவர்கள் விரும்பும் ஆதர்சன நாயகர்கள் பார்த்தால் கூட விரும்ப மாட்டார்கள் என்பதே உண்மை.

இருந்தாலும், அந்தந்த ராசிகர்களுக்குள் இருக்கு வன்மத்தை இணையத்தின் வாயிலாக மிகவும் மோசமாக வெளிக்காட்டிக்கொண்டு வருகின்றனர். இதில், நேற்று எல்லாம், RIPJosephVijay, RIPAjithKumar என டிவிட்டரில் ஹேஸ் டேக் வந்து இணையவாசிகளை அதிரவைத்துவிட்டது.

இது குறித்து, பிரபல சினிமா ஆடை வடிவமைப்பாளரும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தங்கையுமான வாசுகி பாஸ்கர் இது குறித்து ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், ‘ டிவிட்டரில் இந்த மாதிரி தொடர்ந்து நடக்கும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே வழி, இருவரும் ரசிகர்களுக்கு ஓர் அறிக்கை வெளியிட வேண்டும்

இதையும் படியுங்களேன் – மீண்டும் மீண்டும் ரசிகர்களை ஏமாற்றும் சூர்யா.! இதெல்லாம் நியாயமே இல்லைங்க சார்.!

அதில், இந்த மாதிரியான டிவிட்டர் ஹேஸ்டேக்குகளை பயன்படுத்த வேண்டாம் என அவர்களுக்கு கூற வேண்டும். அப்பட கூற தவறினால், வருங்கால சந்ததியினர் சமூக விரோதிகளாக மாறுவதற்கு இவர்களே அனுமதி கொடுத்தது போல ஆகிவிடும்.’ என குறிப்பிட்டுள்ளார்.

Manikandan
Published by
Manikandan