வெட் லவ்லா... மராத்தி பாடலுக்கு மவுஸ் ஜாஸ்தி - ட்ரெண்டிங் வீடியோ!
வெட் லவ்லா பாடல்:
வித்தியாசமான மியூசிக்கில் நல்ல நடனத்தோடு பாடல் வெளியானால் அது மொழியை தாண்டியும் மக்களிடையே ரசிக்கக்கூடிய பாடலாக இருக்கும். அந்த வகையில் தற்போது வெட் லவ்லா என்ற மராத்தி பாடல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நிஹார் ஷெம்பேகர் மற்றும் ஷார்க் ஆகியோரால் இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட ஒரு மராத்தி பாடல் தான் இந்த வெட் லவ்லா. இந்த திரைப்படத்தின் பாடல் ஒரு துள்ளலான மற்றும் ரொமான்டிக் பாடலின் வரிகளில் அமைந்துள்ளது .
ட்ரெண்டிங் வீடியோ:
இந்த பாடலின் வித்தியாசமான இசை அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. இந்த இந்த பாடல் தான் தற்போது சமூக வலைத்தள வாசிகளின் ஃபேவரட்டான பாடல் லிஸ்டில் இடம் பிடித்து ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த பாடலின் வீடியோ கிளிப் வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
