Categories: Cinema News latest news throwback stories

சில்க் ஸ்மிதாவுடன் ஒரு இரவு!… கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த பிரபல இயக்குனர்… அடக்கொடுமையே…

1980களில் தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் சில்க் ஸ்மிதா. இவரது உடல் வனப்புக்கு தென்னிந்திய இளைஞர்களே அடிமையாகி கிடந்தனர். அக்காலகட்டத்தில் டாப் நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா, ஒரு நபருடன் காதலில் விழுந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த வேளையில் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் சில்க் ஸ்மிதா. இந்த செய்தி தமிழ் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்போதுவரை சில்க் ஸ்மிதாவின் தற்கொலைக்கான காரணம் மர்மமாகவே உள்ளது.

Silk Smitha

இந்த நிலையில் ஒரு பிரபல இயக்குனர் சில்க் ஸ்மிதாவுடன் ஒரு நாள் இரவு தங்கியதை குறித்து வெளிப்படையாக ஒரு பத்திரிக்கைப் பேட்டியில் பேசியிருக்கிறார். அது யார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிகப்புகழ் பெற்ற இயக்குனராகவும் ஒளிப்பதிவாளருமாக திகழ்ந்தவர் வேலு பிரபாகரன். “நாளைய மனிதன்”, “அதிசய மனிதன்”, “புதிய ஆட்சி”, “அசுரன்” போன்ற பல திரில்லர் திரைப்படங்களை இயக்கியவர் இவர். மேலும் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

Velu Prabhakaran

வேலு பிரபாகரன் பிரபல நடிகையும் கதாசிரியருமான ஜெயதேவியை திருமணம் செய்துகொண்டார். ஜெயதேவி, “விலாங்கு மீன்”, “விலங்கு” போன்ற பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஜெயதேவியும் வேலு பிரபாகரனும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள் என்றாலும் காலப்போக்கில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஜெயதேவி, தனது முன்னாள் கணவரான வேலு பிரபாகரனும் சில்க் ஸ்மிதாவும் நெருங்கி பழகி வந்தது குறித்து பேசியுள்ளார்.

Jayadevi

அதாவது “பிக் பாக்கெட்” என்ற திரைப்படத்தில் வேலு பிரபாகரன் கேமரா மேனாக பணியாற்றியபோது அந்த படத்தில் நடித்த சில்க் ஸ்மிதாவுடன் நெருக்கமான உறவு ஏற்பட்டதாம். அதன் பிறகு ஒரு நாள் ஒரு பத்திரிக்கைப் பேட்டியில் வேலு பிரபாகரன் “சில்க் ஸ்மிதா வீட்டில் ஒரு மாலை வேளையில் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. நடு இரவு ஆகிவிட்டது. எதாவது சாப்பிட இருக்கிறதா? என அவரிடம் கேட்டேன்.

Velu Prabhakaran

உடனே சில்க் ஸ்மிதா எனக்காக உப்மா செய்துதந்தார். என் வாழ்வில் மறக்கமுடியாத தருணம் அது. உலகமே சில்க் ஸ்மிதாவின் காலில் தஞ்சம் இருந்தபோது என்னை மட்டும் இறைவன் ஆசீர்வதித்திருக்கிறான். அந்த இரவு சில்க் ஸ்மிதாவுடன் ஒரு புனிதமான இரவாக கழிந்தது. காலையில் என் மனைவி ஜெயதேவியின் முகத்தை பார்க்கவே கூச்சமாக இருந்தது” என்று மிகவும் வெளிப்படையாக பேட்டியளித்திருந்தாராம். இது ஜெயதேவியின் மனதை மிகவும் பாதித்ததாம். இவ்வாறு ஜெயதேவி அந்த பேட்டியில் மிகுந்த மன வருத்தத்தோடு இந்த விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதையும் படிங்க: முத்தக்காட்சிக்கு பயந்து கமலுடன் நடிக்க மறுத்த நடிகைகள்… லிஸ்ட் பெருசா இருக்கே!…

Published by
Arun Prasad