Categories: Cinema News latest news

வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்த போடு…. பட விளம்பரத்துக்கு என்னென்ன செய்றாங்க பாருங்க…

மாநாடு திரைப்படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றி நடிகர் சிம்புவை மிகவும் உற்சாகத்துடன் அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற வைத்து வருகிறது. தற்போது பலத்தை எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் தான்.

இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். சிம்பு – கௌதம் மேனன் கூட்டணியில் ஏற்கனவே வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா சூப்பர் ஹிட் திரைப்படம். அதற்கு அடுத்து வெளியான அச்சம் என்பது மடமையடா திரைப்படமும் ஒரு நல்ல திரைப்படமாக அமைந்தது. ஆதலால் மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.

இதையும் படியுங்களேன் –  நீ இப்படி இருந்தால் தான் ரெம்ப அழகா இருக்க… ஓப்பனாக கமெண்ட் அடித்த தனுஷ்.! வெளியான சீக்ரெட்…

இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனை ஒட்டி படத்திற்கான பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வரும் 2ஆம்தேதி நடைபெற உள்ளது.

இதையும் படியுங்களேன் – நான் எவளோ கஷ்டப்படுகிறேன் தெரியுமா.? ஆனால் ரஜினி..? இது கமலின் பாராட்டா.?! விமர்சனமா.?

இது தவிர மற்ற பிரமோஷன் வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வெந்து துணிந்தது காடு போஸ்டர் பதியப்பட்ட டி-ஷர்ட் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இதனை தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் விநியோகிக்க படக்குழு முயற்சித்து வருகிறது. அதற்கான பிரமோஷன் வெகு தீவிரமாக தீயாய் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் நிச்சயம் சிம்பு திரை வாழ்வில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் ஒரு நல்ல இடத்தை பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan