இயக்குநர் லோகேஷ் கனகாராஜுக்கு முன்னாடியே விக்ரம் பார்ட் 2வை எடுக்க பிளான் போட்டதே வெங்கட் பிரபு தான் என்கிற பழைய பேட்டி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ராஜ்கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் 400 கோடி வசூலை நெருங்கி உள்ளதாக கூறுகின்றனர்.
மாநாடு படத்தின் மூலம் சமீபத்தில் மிகப்பெரிய வெற்றி கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு, விஜய் டிவியின் பிரபா தொகுப்பாளினி டிடியின் காபி வித் ஷோவில் தனது தம்பி பிரேம்ஜி உடன் கலந்து கொண்ட பழைய பேட்டியை தற்போது சில ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
மங்காத்தா 2வை எப்போ எடுப்பிங்கன்னு போகிற இடத்தில் எல்லாம் வெங்கட் பிரபுவிடம் கேள்வி எழுப்பி வரும் நிலையில், விக்ரம் பார்ட் 2வுக்கே கமல்ஹாசனை வைத்து வெங்கட் பிரபு போட்ட பிளான் அந்த வீடியோவில் பக்காவாகத் தெரிகிறது.
ரஜினி படம் கைவிட்டு போன நிலையில், திடீரென கமலுக்கு படம் பண்ண கதை தெரியாமல் தேடிக் கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் ஒரு வேளை இந்த வீடியோவை பார்த்து விட்டுத் தான் பழைய விக்ரம் கனெக்ஷன் உடன் கைதி 2வுக்கு வைத்த கதையை மிக்ஸ் செய்து எடுத்து விட்டாரா? என்றும் அந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எப்படி இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் கமலுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்கிற எதிர்பாரா ஆசையே நிறைவேறி விட்டது. ஆனால், வெங்கட் பிரபுவின் ஆசை தான் எப்போது நிறைவேறுமோ என்பது தெரியவில்லை.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…